.

.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

இந்தப் புன்னகை போதுமடி.



கலயத்திலே தண்ணீர் கொண்டு
வீதியிலே வரும் பெண்ணே.......

உன் மனசிலே பாரமில்லா நிலை
எப்படி சொல்லு பெண்ணே!


வெறுப்பில்லா புன்னகை உன்
வதனத்தில் தவழுதடி.....
பணம் கொடுத்தும் அதை நான்
பெறுவது தான் கடினமடி!


ஏழ்மையின் கொடுமை உன்னிடம்
தோற்றுப்போகும் விடயமடி.....
ஏங்கியே நிற்போர்க்கு உன்
வாழ்க்கை சிறந்த பாடமடி!


கைவீசி நடக்கையிலே நீ
அழகை கொட்டிச் செல்லுகின்றாய்....
இயற்கையாய் உனைப்பார்க் நான்
வரம் வாங்கிய ஜீவனடி!


பூங்காற்று உனைப்பார்த்து
புதுக்கவிதை பாடுதடி...
மானும் மயிலும் உனைப் பார்த்து
ஆனந்த நடனம் ஆடுதடி!


உன் புன்னகையிடம் நான்
இங்கே எதுவுமில்லா ஏழையடி...
இறைவன் பார்வையிலே நீ
என்றும் வாச மலரடி!


சின்னச் சின்ன சந்தோஷங்கள்
உன் மடியில் விளையாடுதடி....
உனைப்போல வாழ்ந்துவிட்டால்
உலகில் துன்பம் இல்லையடி!!!


 
-நன்றி-
-அன்புடன்-
-துஷ்யந்தி-

20 கருத்துகள்:

  1. வணக்கம்

    தங்களின் புதிய வலைப்பூவுக்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்... தங்களின் முதல் கன்னிக் கவிதை மிக அருமையாக உள்ளது... தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தாங்களின் அன்பான
      பின்னூட்டத்துக்கு.......
      தொடர்ந்தும் நற்பதிவுகளை
      வழங்க முயர்ச்சிக்கிறேன்
      இணைந்திருங்கள்

      நீக்கு
  2. கவிதை அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தொடர்ந்தும் பதிவுகளுடன்
      இணைந்திருங்கள்
      நன்றி

      நீக்கு
  3. "ஏழ்மையின் கொடுமை உன்னிடம்
    தோற்றுப்போகும் விடயமடி.....
    ஏங்கியே நிற்போர்க்கு உன்
    வாழ்க்கை சிறந்த பாடமடி!" என்ற
    வரிகளை வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டலுக்குநன்றிகள்
      தொடர்ந்தும் இணைந்திருங்கள்

      நீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி
      டி.என்.முரளிதரன்
      தொடர்ந்தும் இணைந்திருங்கள்

      நீக்கு
  5. அருமை...

    வலையுலகம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி
      திண்டுக்கல் தனபாலன்
      தொடர்ந்தும் இணைந்திருங்கள்
      கருத்துக்களை வழங்குங்கள்

      நீக்கு
  6. 'மௌனத்தின் கீறல்கள்' ஆரம்பித்தமையையிட்டு என் அன்பு வாழ்த்துக்கள்.
    கவிதை அருமை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி
      சகோதரி இமா
      தொடர்ந்தும் இணைந்திருங்கள்

      நீக்கு
  7. கவிதை அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. கவிதையும் படமும் அருமை தொடருங்கள்--சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களின் பின்னூட்டலுக்கு
      நன்றி
      தொடர்ந்தும் இணைந்திருங்கள்

      நீக்கு
    2. தாங்களின் பின்னூட்டலுக்கு
      நன்றி
      தொடர்ந்தும் இணைந்திருங்கள்

      நீக்கு
  9. Very nice.. அருமை அருமை!
    விமல்.
    bepositivetamil.com

    பதிலளிநீக்கு

வணக்கம்
உறவுகளே...வருக வருக அன்புடன்