.

.

புதன், 29 ஏப்ரல், 2015

இறுதிவரை நானிருப்பேன்!

அன்னையைப் பிரிந்து
பால் மனம் மறந்து
என்னிலே தஞ்சமென
வந்த என் செல்லமே......

அன்னையாய் நானுன்னை
அன்பாலே வருடிச்செல்ல
இன்பங்கள் எத்தனை
சொல்லத்தான் தெரியவில்லை....

உன் சின்னக் குறும்பிலும்
செல்லச் சண்டையிலும்
என்னை நான் மறக்கின்றேன்
எங்கோ பறந்து செல்கின்றேன்.......

ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
என் சிந்தையில் பறப்பதாய்
எனக்குள்ளே ஆனந்தம்
பாசத்தில் பேரின்பம்.....

நீ பசியாலே துடிக்கையில்
பதறித்தான் போகின்றேன்
தினம் கண் விழிக்கையில்
வழியெங்கும் தேடுகிறேன்....

சின்னவள் உன்னிடம்
நற்பண்பை உணர்கிறேன்
நன்றியின் அர்த்தந்தனை
நன்றே கற்றுக் கொள்கிறேன்....

நீ காட்டும் அன்பிலே
திழைத்துத்தான் போகிறேன்
நித்தம் என் உறவாய்
உன்னை நான் பார்க்கிறேன்....

இன்பத்திலும் துன்பத்திலும்
என்னுடன் நீ கலந்திடுவாய்
இணைபிரியா அன்போடு
என்னோடு பயணம் தொடர்வாய்...

அதுவரை,
உயிரொன்று என்னுடலில்
நடமாட இருந்துவிட்டால்
விழகாது உன்னோடு
இறுதிவரை நானிருப்பேன்..!!!

துஷ்யந்தி.

3 கருத்துகள்:


  1. "உன் சின்னக் குறும்பிலும்
    செல்லச் சண்டையிலும்
    என்னை நான் மறக்கின்றேன்
    எங்கோ பறந்து செல்கின்றேன்..." என்று
    அழகாகப் புனைந்த பா!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    மனதை நெருடும் வரிகள் அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    இனிய மேதின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வணக்கம்
உறவுகளே...வருக வருக அன்புடன்