.

.

புதன், 29 ஏப்ரல், 2015

கஞ்சாவும் கல்லூரி வாசலும்!



தீயென்று தெரிந்தும்
தொட்டுப் பார்க்கும் வயது
கல்லூரி வாழ்வில்
எல்லோர்க்குமான துடிப்பு.!

வீணான எண்ணங்களை
வாசல் வரை வந்து
தேனாகக் காட்டுவதில்
தீயோர்க்கு இன்பம்..!

சரியென்றும் பிழையென்றும்
தேடிப் பார்க்காது
பிழைகளில் நுழைவது
பலரது பழக்கம்...!

நோயாகப் போதையை
நுழைவித்து வாசலில்
நோக்கத்தை ஈடேற்றும்
சதிகாரர் எண்ணம்..!

சிலந்தி வலையிலே
மாட்டிக்கொண்ட வண்டாய்
வெளிவர வழியில்லா
மாணவர் எத்தனை...???

விழிப்பொன்றை ஏற்படுத்தி
விளக்கத்தைச் சொன்னால்
கல்லூரி வாசலும்
பூங்காவனமாய் மாறிடுமே..!

பெற்றோரின் பொறுப்பும்
ஆசிரியரின் போதனையும்
மாணவப்பூக்களை வழிதவற
நிச்சயம் விடுவதில்லை...!

அறிவைத் தேடும்
சிறியோர் மனதில்
அபாயத்தை விதைக்க
தடையென்று மொழிவோம்..!

சட்டங்கள் இயற்றுவோம்
சதிகாரரை வெல்லுவோம்
சமுதாய சீர்கேடுகளை
வளர விடாது தடுப்போம்...!!!

துஷ்யந்தி

2 கருத்துகள்:

  1. அருமை...

    மாணவ செல்வங்கள் உணர வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    காலம் மாறி விட்டது.... மாணவர்கள் சிந்தித்தால் எல்லாம் சரி... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வணக்கம்
உறவுகளே...வருக வருக அன்புடன்