.

.

புதன், 15 ஏப்ரல், 2015

கவிஞன்

கவிஞன்..!
*************

விழியென்னும் தடாகமதில்
மொழியெல்லாம் உயிர் பெற்று
சிந்தனைச் செடிகளாய்
கவியிதழ் பூக்களாய்
தமிழ்க் கோர்த்த மாலையாய்
பிறந்திடும்  அவன் பார்வையிலே!

தூய்மையின் நிறம் சொல்லும்
வெண் கடுதாசி ஏடுகளும்
அவன் பேனையின் மை பட
பேரழகு பெற்றிடும் -இன்னும்
சில துளி கவிக்காய்
ஏங்கியே நின்றிடும் - அவன்
பாக்களின் சொல்லாலே!

மாயத்திரையை நுகர்ந்து
மனதிலே அழகிய கோலமிட்டு
யதார்த்த வரிகளாய் அமைத்து
ரசிக்கும்படியாய் அமைத்து
சொற்களோடு விளையாடும்
அவன் அழகிய எண்ணங்களே!

எளிமையாய் வாழ்ந்திடும்
அமைதியை நேசித்திடும்
உறவுகளை மதித்திடும்
உணர்வுகளை ரசித்திடும்
உள்ளங்களை படித்திடும் -அவன்
இயல்பான வாழ்க்கையே!

வீசும் தென்றல் கூட அவனிடம்
பேசிடும்  மொழிகள்....
இருளின் சுவடுகள் அவனிடம்
காட்டிடும் கவிதைகள்.....
அந்தி வானமோ அவனிடம்
தூவிடும் சிந்தனைகள்...
கொட்டும் மழையோ அவனை
நனைத்திடும் தேன் தமிழாலே...
ஏனெனில் ,
அவனோ இயற்கை அன்னை
தன் கைகளாலே செதுக்கிவிட்ட
குழந்தையே....!!!

துஷ்யந்தி.

5 கருத்துகள்:

  1. வணக்கம்

    வீசிடும் தென்றல் கூட கவிஞனின் மொழிதான்...
    அந்திவானம் தூவிடும் சிந்தனை . ....
    அடா அடா.... என்ன கற்பனை ... கவிஞன் கற்பனையில் குழந்தையாவான்...
    அருமையான வரிகள் தொடர் பதிவிட வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வணக்கம்
உறவுகளே...வருக வருக அன்புடன்